கிரிக்கெட் போட்டியில் "இந்தி" பிரச்சாரமா? சர்ச்சையை ஏற்படுத்திய வர்ணனையாளர்கள்

0 1143

அனைத்து இந்தியர்களும், இந்தி மொழியை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கிரிக்கெட் வர்ணனையாளர்கள், போட்டியொன்றின் நேரலையில் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பெங்களூருவில், நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், கர்நாடக அணியும், பரோடா அணியும் மோதின. போட்டியின் நேரலையில், இரண்டு வர்ணையாளர்களில் ஒருவர், கவாஸ்கரின் இந்தி வர்ணனை குறித்துப் பேசினார்.

அப்போது, மற்றொருவர், தனது தாய்மொழியான இந்தி தான், இந்தியாவில் உள்ள மொழிகளில் எல்லாம் முதன்மையான மொழி என்றார். எனவே, இந்தியர்கள் அனைவரும், இந்தி மொழியை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Did this lunatic commentator just say “Every Indian should know Hindi” ? What on earth do you think you’re ⁦@BCCI⁩ ? Stop imposing Hindi and disseminating wrong messages. Kindly atone. Every Indian need not know Hindi #StopHindiImposition #RanjiTrophy #KARvBRD pic.twitter.com/thS57yyWJx

— Ramachandra.M/ ರಾಮಚಂದ್ರ.ಎಮ್ (@nanuramu) February 13, 2020 ">

இதனை மற்றொரு வர்ணனையாளர் ஆமோதித்து கருத்துத் தெரிவித்தார். இந்த சர்ச்சைக்குரிய வர்ணனை வீடியோ வெளியாகி, டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தது. இதைக்கண்டு திகைத்துப்போன சர்ச்சையை கிளப்பிய வர்ணனையாளர்கள், போட்டியின்போது, பலமுறை மன்னிப்புக் கோரினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments